புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து

வெலிகம – பெலென பகுதியிலுள்ள புகையிரத கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் வெலிகம – பெலன உரக் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள கடவையில், மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தில்
முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.
இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த 32 வயதுடைய அவர்களின் உறவினர் ஒருவரே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் விபத்தில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவனும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

T03
.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply