எல்பிட்டிய, எத்கந்துர, திவிதுரவத்த பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண் ஒருவர் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று காலை அவரது வீட்டினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 33 வயதுடைய பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கான சந்தேகத்தின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
T01
