நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!

நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது, இன்று 5ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில்,  சமாதான நீதவானும் சனசமூக நிலைத் தலைவருமான திரு.க.நாகேந்திரம் தலைமையில், அவர்களது மைதானத்தில் விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.

பிற்பகல் 2 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் மெய்வல்லுநர் போட்டிகள்  ஆரம்பமாகவுள்ளன.

இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகளில் பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணி அளவில் கலை நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கலைநிகழ்வில் ஈழ நல்லூர் அருணா இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply