யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை திறக்கும் திகதி வெளியாகியுள்ளது.
விகாரையை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பொசன் தினத்தன்று திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தையிட்டியில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த விகாரைக்குக் கலசம் அண்மையில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விகாரையை அகற்றி தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
t03
