ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்களும் வர்த்தக சங்கமும் தெரிவித்துள்ளன.
ஒரு கிலோ மாவுக்கு 3 ரூபா என்ற சுங்கவரிச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும் வரி திருத்தத்தினால் மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் சீனியின் விலை 25 ரூவாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பொருட்கள் இறக்குமதிச் சங்கம் தெரிவித்துள்ளது.
t03
