இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளிகள் முற்றாக பார்வையை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் சத்திர சிகிச்சைக்குள்ளான 50 வயதிற்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இந்த பாதிப்புக்காக தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ளதால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளர்களின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியாப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சைகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளர்கள் கண்பார்வை முற்றாக இழந்த நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு படிப்படியாகக் குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply