இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை வெடிப்பு!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை வீச்சால் பொலிஸார் விரட்டியடித்துள்ளனர்.

பாகிஸ்தானின் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, பாகிஸ்தான் மதிப்பில் 530 மில்லியன் மதிக்கத்தக்க இடமொன்றை, முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்குச் சொந்தமான அல்காதிர் அறக்கட்டளைக்கு வழங்கியதாகக் கூறி அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து வெளியே வந்த இம்ரான்கானைத் துணை இராணுவப் படையினர் கைது செய்தனர்.

இம்ரான்கான் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில இராணுவத்துடன் வன்முறையில் ஈடுபட்டனர். குறித்த மோதலில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், கராச்சி, பெசாவர், ராவல்பிண்டி மற்றும் லாகூர் போன்ற பிரதேசங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் மேலும் பரவாமல் தடுப்பதற்காகச் சமூக ஊடகங்களின் பயன்பாடும், இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply