மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் !

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக கொண்டுவந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் பழைய வாக்களிப்பு முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் பல தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயற்சித்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply