இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மடிக்கணினிகளுடன் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிங்கப்பூர், அபுதாபி மற்றும் துபாயில் உள்ள ஆதரவாளர்களால் 250 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
எதிர்காலத்தில் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கூடுதலாக 10,000 மடிக்கணினிகள் பெறப்படும் என்று ராமநாயக்க தெரிவித்தார்.
மடிக்கணினி தேவைப்படும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்கும் திட்டம் தொடரும் என்றும், மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கைச் சுங்க அதிகாரிகளுக்கும் நன்கொடையில் ஈடுபட்ட நபர்களுக்கு நன்றியையும் அவர் தெரிவித்தார்.
t03
