இலங்கைக் கடற்படை தனது முதல் பெண் கடற்படை வீராங்கனை அணியை கடல் கடமைகளுக்கு நியமித்துச் சரித்திரம் படைத்துள்ளது.
இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து பெண் மாலுமிகள் உட்பட கடற்படை பெண்களின் முதல் குழு கடந்த வியாழக்கிழமை இலங்கைக் கடற்படை சேவையான கஜபாகுவில் இணைக்கப்பட்டது.
குறித்த பெண் அதிகாரிகளும் பெண் மாலுமிகளும் வழி செலுத்தல், கடற்படை பொறியியல், மின்சாரம், போர் மருத்துவம், தீயணைப்பு மற்றும் தகவல் தொடர்பு பற்றிய நடைமுறை மற்றும் தத்துவார்த்த அறிவைப் பெற்றுக் கடமைக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
