இம்மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் ஈழத்தமிழர் பேரவையின் முதலாவது மாநாட்டினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு 100 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதோடு இந்த ஆட்சி முறைக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டமூலத்தினாலும் தீர்வினை பெறமுடியாது என்பது தொடர்பாகவுமே இந்த மாநாட்டில் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
t03
