கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் குடும்பத் தலைவரொருவரைத் தாக்கிய காணொளியினை டிக் டொக் பதிவின் மூலம் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த எட்டுப்பேரே குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 10 நாட்களாகத் தலைமறைவாக இருந்தாகவும், காங்கேசன்துறைப் பொலிசாரால்கைது செய்யபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாள் முரண்பாடு காரணமாக குறித்த குடும்பத் தலைவரைத் தாக்கி, அந்த காணொளியினை டிக் டொக்கில் அவர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
