வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் பயணித்த போது நாய் ஒன்றுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த பாலத்துடன் மோதியதாக கூறப்படுகின்றது.
இவ்விபத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய தனுஜன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
t03
