வவுனியா நகரத்தின் மத்தியுள்ள வர்த்தக நிலையத்துக்கு முன்பாக சடலமொன்று மீட்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக எவ்வித அசைவுமின்றி ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதினை உறுதிப்படுத்தினர்.
சடலம் தடயவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே வைக்கப்பட்டிருந்ததோடு, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம், எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
T03