முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை, என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற வதந்திகள் தவறானவை, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதித்திட்டங்களினூடாக பிரதமர் பதவியைப் பெறுவதற்குத் தயாராக இல்லை, என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
