அரகலய உறுப்பினர்கள் பிள்ளைகளை முறையற்றுப் பெற்றுக் கைவிடுகின்றனர்

அரகலய உறுப்பினர்கள் பிள்ளைகளை முறையற்ற விதங்களில் பெற்று, அவர்களைப் புகையிரதப் பாதைகளில் விட்டுச் செல்வதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரகலயா உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால், தேவையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் தமது பிள்ளைகளைப் புகையிரதத் தண்டவாளத்தில் வீசி விடுகின்றனர், என அமைச்சர் ரணதுங்க அபிவிருத்தி அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது தெரிவித்தார்.

இன்னொரு அரகலயாவைத் தொடங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால் அரசைச் சீர்குலைக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒர் அரசைச் சீர்குலைப்பது என்பது பயங்கரவாதச் செயல், என்றும் அவர் கூறினார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply