தெமட்டகொடவில் உள்ள தொடருந்து நிலையத்துக்குள் புகுந்து திருட முற்பட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் தொடருந்துப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்றதாகவும் அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருட வந்தவர்களில் ஒருவர் தப்பித்துச் சென்றதாகவும், குறித்த சந்தேகநபர் டீசல் , தொடருந்து உதிரிப் பாகங்கள், செப்பு கம்பிகள் போன்றவற்றைத் திருடி சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
T03
