குவைத் நாட்டிற்குச் சென்று, அங்கு சட்ட விரோதமாகத் தங்கியிருந்த 32 பெண்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
தாங்களாகவே இலங்கைக்குச் செல்லப் பதிவு செய்த பெண்களே நாடு திரும்பியதாகக் கூறப்படுகின்றது.
குறித்த பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா,
கொழும்பு, குருநாகல் மாற்றும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்
எனத் தெரியவந்துள்ளது.
T03
