அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்குத் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நீதிமன்ற வளாகத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். பிக்கர், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வேறு எந்த வழக்கிலும் இம்ரான் கானைக் கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று இரவு தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபின்னர், அரசுக்கு எதிராக இம்ரான் கான் பரபரப்பான குற்றச்சாட்டினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டில், இராணுவம் தன்னை வேண்டுமென்றே 10 ஆண்டுகள் சிறை வைக்கத் தீர்மானித்துள்ளதாகவும், தன்னுடைய இறுதி இரத்தம் உள்ளவரைக்கும் சுதந்திரத்திற்காகப் போராடுவேன், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
T01