புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வீடைமைப்பு அதிகார சபையுடன் இணைந்து இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தேனுனகமகேவுடன் இடம்பெற்றதோடு, எதிர்வரும் திங்கட்கிழமை புலம்பெயர் தொழிலார்களின் விட்டுத்தேவை தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்கத் தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கணக்கெடுப்பின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, கட்டப்படும் வீடுகளின் வகை, வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வீடுகள் கட்டப்படும் இடம் தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
T03
