பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இருந்து சுகாதார அமைச்சை நோக்கி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச மருத்துவ பீடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரியும், புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தாமரைத் தடாக சந்திக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நெரிசலைக் குறைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மூலம் மாணவர்களைக் கலைத்திருந்தனர்.
T03
