யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்று மாலை முதியவர் ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மலசலகூடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு திருப்பதி (திருப்பதி மாஸ்டர்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.
வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவரே சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவரின் மனைவியும் சிறிது காலத்தின் முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் முதியவரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
T03
