வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

கெக்கிராவ – எப்பாவல பிரதான வீதியின் மஹஇலுப்பள்ளம பகுதியில் கார் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹஇலுப்பள்ளமப் பிரதேசத்தில் இடம்பெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் பின்னர், மாணவன் சேனாபுர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் அங்கு செல்வதற்கு முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply