சாதாரணதரப் பரீட்சை அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பிவைப்பு

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை அனுமதி மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி மற்றும் நேர அட்டவணைகள் தபாலில் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை, பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply