இங்கிலாந்தைத் தலைமையகமாகத் கொண்டு இயங்கும் வொடாபோன், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பதினோராயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் திடீர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சமீப காலமாக உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், பணியாளர்கள் பலரைப் பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் வொடாபோன் நிறுவனமும் 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூகிள், அமேசன், ஐபிஎம் உள்ளிட்ட பல பிரபலமான நிறுவனங்களைத் தொடர்ந்து வொடாபோன் நிறுவனமும் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை நீக்க உள்ளமையானது பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T01