இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொலை

அனுராதபுரம் -பதவிய மஹசென்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்துவந்த அவர், 36 வயதுடையவர் என்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களிலில் வந்த மூவர் ரி-56 ரகத் துப்பாக்கியால் அவரைச் சுட்டுக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கி சூடு தொடர்பாக 119 க்கு கொடுக்கப்பட்ட தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் அவர் அதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply