தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொடிகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரித் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் கொடிகாமம் நகர மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரித் தொகுதிக் கிளைத் தலைவர் செல்வரத்தினம் மயூரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், முச்சக்கரவண்டிச் சங்கத்தினர், தனியார் சிற்றூர்திச் சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நினைவேந்தலின்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply