முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையினை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இதன்படி, கடந்த 2022 மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடைகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T01
