சஜித் அணியில் புதிய நியமனங்கள்

சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் சஜித் பிரேமதாச இரண்டு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் SJB இன் செயற்குழு கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

இதன்படி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா SJB யின் உப பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கட்சியின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜகருணா மற்றும் ரஹ்மானிடம் இதற்கான நியமனக் கடிதங்கள் சஜித் பிரேமதாஸவினால் அவரது அலுவலகத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply