யாழில், தனது கணவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த மேலும் 3 பேரை தனித்தனியே அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் இவ்வாறு நடந்து கொள்வதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி வலயம் ஒன்றின் அதிகாரியான ஒருவர் மீதே மனைவி இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதேசமயம் அதிகாரியின் மனைவியும் அரச அலுவலர் என கூறப்படுகின்றது.
பிள்ளைகள் பாடசாலை சென்ற பின் தானும் அலுவலகம் சென்று விடுவதாகவும் இதன் பின்னர் தனது கணவர் இளைஞர்களை வீட்டுக்கு கொண்டு வந்து இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதாகவும் மனைவி கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
T03
