கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காயமடைந்த நபரின் சகோதரர், சகோதரரின் மகன், இன்னுமொரு நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கணேமுல்ல மற்றும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த 56, 20 மற்றும் 25 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
T03
