உமா ஓயா நீர் மின் நிலையத்தின் இரண்டு அலகுகள் இந்த வருடம் மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்றுப் பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, யூனிட் 1 இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் கிடைக்கும் அதே நேரத்தில் யூனிட் 2 செப்டம்பரில் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, 120 மெகாவாட் நீர் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாண நிறுவனமான பராப் நிறுவனருக்கும் உமா ஓயாவின் திட்ட முகாமையாளருக்கும் பிரதிநிதிகளுக்கும் மற்றும் பராபின் நிர்வாக இயக்குநர் அலி வக்கிலி ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பின்போதே அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
