எட்டு உயர் நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு ஒப்புதல்

இரண்டு அமைச்சு செயலாளர்களினதும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் 6 பேரினதும் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக யமுனா பெரேராவை நியமிப்பதற்கு இக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ஷவை நியமிப்பதற்கும் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அணுசக்தி வாரியத்தின் தலைவராக பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசாவும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரத்னசிறி களுபஹனவும், மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தின் (CECB) தலைவராக இன்ஜி. ஏ. கல்கெட்டியவும், பொதுச் செயற்குழுவின் தலைவராக ஸ்டெல்லா மாரப்பனவும், தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஜயந்த விஜேரத்னவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply