மட்டக்களப்பில் 18 வயது மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமை ஆற்றிவரும் ஆசிரியரே தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவரது தனியார் கல்வி வகுப்பில் படித்துவந்த கிரான் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவியொருவருடன் பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்குச் சென்ற போதே கையும் மெய்யுமாக அவர் சிக்கியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

அவர்களில் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்ததாகத் தகவல் கிடைத்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply