இலங்கையின் மிகப்பெரிய கண்காட்சி பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.
இலங்கையில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்காக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தக துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்தக் கண்காட்சி உதவும் எனவும், இதனால் சர்வதேசப் பயணிகளைக் கவரமுடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
T03
