தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தைக் கடத்த முற்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என சுங்கப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின்போது இரண்டு கிலோ எடையுள்ள தங்கம் அவரது பயணப் பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

35 வயதுடைய வர்த்தகர், அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர் எனவும், கொழும்புப் பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பயணப் பொதிகளில் இருந்த கம்பிகளில் சுற்றப்பட்ட நிலையில் தங்கம் காணப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார்.

பின்னர், முறையான சுங்க விசாரணையில், கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply