13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! தமிழகத்தில் இலங்கையர் ஒருவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை

கடந்த 2022 ஆம் ஆண்டு 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் இலங்கையர் ஒருவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த 52 வயதான இலங்கையருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply