யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! வடக்கு ஆளுநர் சூளுரை

உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ள  திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” வடமாகாண அவைத்தலைவர், மாகாண மக்கள், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும் அதை முன்னெடுத்து செல்லுமாறும் அவர் கூறியிருக்கின்றார்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கின்றேன். நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக  உணர்ந்திருக்கின்றேன்.

எனவே அந்தப் பிரச்சினையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பேன்.

அதேபோல், இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. அந்த வகையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் எடுக்கப்படும் ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply