தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணத்தில் மாற்றம்!

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்பானது ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும், என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, உள்நாட்டு பெரியவர்களுக்கு 200 ரூபாவும், சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக 30 ரூபாவும், அறவிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாட்டு பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,000 ரூபாவாகவும் வெளிநாட்டு சிறுவர்களுக்கு 1,500 ரூபா வசூலிக்கப்படவுள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply