சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாகக் கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெயினை மீனவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்பிடி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீனத்தூதுவர் சி ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் இந்தநிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது, மண்ணெண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் வீதம் மண்ணெண்ணெய் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
T03
