தன்னுடைய பிள்ளைகளைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை ஒருவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், மூன்றரை வயதுக் குழந்தையைத் தூக்கித் தரையில் அடித்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தை இந்தக் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் மூன்று
பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை தற்போது அனாதை இல்லத்தில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் கடுமையான நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால், இந்தக் குழந்தைகளுடன் வாழ சில உதவிகளை வழங்குமாறு குழந்தைகளின் தாயார் கோரியுள்ளார்.
T03
