சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் நவீன கைப்பேசிகளைக் கடத்தினர் என்னும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீதிமன்றில் 7.5 மில்லியன் ரூபா அபராதம் செலுத்திய பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் சட்ட விரோதமான முறையில் கொண்டுவந்த பொருட்களை பறிமுதல் செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுங்க வரித் திணைக்கழகத்தினால் ரஹீமிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் பெறுமதி ஏறக்குறைய 74 மில்லியன் ரூபா எனவும், கையடக்க தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துபாயிலிருந்து இலங்கை வந்தபோது நேற்றுக் காலை, இலங்கைச் சுங்கத்தின் வருவாய் கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
T03