தலாஹேன பிரதேசத்தில் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து வைத்தியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
T03
