இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்கவை நிறுவனத்தின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான உரை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம் நடைபெறுகின்றது.
இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விவாதம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தின்போதே குறித்த விவாதத்திற்கான திகதி தீர்மானிக்கப்பட்டது.
ரத்நாயக்கவை நீக்குவதற்கான பாராளுமன்றப் பிரேரணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7 ஆவது பிரிவின்படி முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விவாதத்திற்கு முன்னதாக, ஜனக ரத்நாயக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு, தன்னை வெளியேற்றுவதற்கான குறித்த முன்மொழிவை அரசியல் உந்துதல் எனச் சாடியுள்ளதோடு, உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தமக்கு ஆதரவாக நிற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன்போது, சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தில் தலையிடவும், அரசியல் செல்வாக்குச் செலுத்தாத பொதுத்துறை ஊழியர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T01