மின்கட்டணம் தொடர்பில் திருத்தப்பட்ட பட்டியல் சமர்ப்பிப்பு

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலைப் பட்டியலை அமைச்சர் காஞ்சன வியசேகர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, 0-30 வரையான மின் அலகுக்கான விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய அலகின் விலை 25 ரூபாவாக முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலையான கட்டணத்தை 400 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 31-60 அலகுகளுக்கு 9% ஆலும் 0-60 அலகுகளுக்கு 7% ஆலும் மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறே 0-30 அலகுகள் வரை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% ஆல் குறைக்கப்படும் என்றும், 31-60 அலகுகள் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை உணவகங்களுக்கு 29% – 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply