பொலிஸாரைத் தாக்கிய மூவர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மூவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

அதன்படி,நேற்று பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்தில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தலைக்கவசம் அணிந்து வராத நபரை நிறுத்திய காரணத்தினால், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொலிஸாரைத் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply