என் மரணத்திற்கு மனைவியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய சமபவமொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று நேற்று(25) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராசதுரை சுதாகரன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினுள் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபரின் மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வசித்து வருகிறார்.
தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்தில் கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் என் மரணத்திற்கு என் மனைவியம் அவரது குடும்பமுமே காரணம் என எழுதப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

