இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் 23 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டில் 273 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 2022 ஆம் ஆண்டில் மட்டும் 523 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வருடத்தின் 146 நாட்களுக்குள் மாத்திரம் 239 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் என்பன பாதிக்கப்படும், எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply