2021ஆம் ஆண்டு O/L மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியாகின!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுக்கு 80,272 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் குறித்து மேலும் விசாரிக்க விரும்பினால், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகள் பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறு கிளையை தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply