நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை – மருத்துவ சங்கம் தெரிவிப்பு

நாட்டில் மருந்துப் பற்றாக்குறையால் நோயாளிகள் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120 க்கும் அதிகமான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்துகளுக்குத் தீவிர பற்றாக்குறை நிலவுவதுடன், அரசாங்கம் இது தொடர்பான நடவடிக்கைகளெதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு மருந்துப் பொருட்களை நன்கொடையாக கினைக்கும் செயல்முறைகளும் பல காரணங்களால் தடைப்பட்டுள்ளன, என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply